Description
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ சிஸ்டர். உங்களுடைய நஸ்ருல் இஸ்லாம் ஆன்லைன் மூலம் நான் ஜம்ஜம் தண்ணீரை பெற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ். ஜம்ஜம் தண்ணீர் இன்ஷா அல்லாஹ் எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான நீராகும்.
என் ஏழுவயது மகள் ஒரு நாள் இரவு வயிறு வலியால் துடித்த போது நான் இந்த ஜம்ஜம் தண்ணீரை தான் அவளுக்கு ஓதிக் கொடுத்தேன்
அல்ஹம்துலில்லாஹ் அவள் மிகவும் ராகத்தாக தூங்கி எழுந்தாள். என்னை பொருத்தவரைக்கும் ஜம்ஜம் தண்ணீர் ஒரு நோய் நிவாரணி நீராகும். இதை நான் மிகவும் பொக்கிஷமாக கருதுகிறேன். இதைப் பற்றிய பயான் ஒன்றை சமீபத்தில் நான் கேட்டேன் . அதில் நபித்தோழர் ஒருவர் ஒரு மாத காலமாக ஜம்ஜம் தண்ணீரை மட்டும் அருந்தி உயிர் வாழ்ந்ததாகவும் , தண்ணீரை குடித்து என் உடம்பு கொழுததுவிட்டன என்றும் அவர் கூறியிருந்தார் .அந்த ஹதீத் புகாரி ஷரீபில் 3522 ல் இடம்பெற்றுள்ளது.
ஜம் ஜம் தண்ணீரை நான் பலரிடம் கேட்டு எனக்கு கிடைக்கவில்லை .ஆனால் நஷ்ருல் இஸ்லாம் ஆன்லைன் அகாடமி மூலம் எனக்கு கிடைத்ததற்கு அல்லாஹ் அவர்களுக்கு மாபெரும் மகத்தான ரஹ்மத்தும் பரக்கத்தும் செய்வானாக. ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
மும்தாஜ், அமஜ்ஜகரை, சென்னை.
Reviews
There are no reviews yet.